NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துருக்கி – கிரீஸ் எல்லையில் கார் விபத்து – 6 அகதிகள் பலி!

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு அகதிகள் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

10 அகதிகள் காரில் பயணம் செய்திருந்த நிலையில், துருக்கி – கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் பொலிஸாரை கண்டு தப்பிக்க முற்பட்ட வேளையில், வீதியின் தவறான பக்கத்தில் காரை செலுத்திய போது, எதிரே வந்த மற்றொரு காருடன் மோதுண்டு அவர்களது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் காரில் இருந்த சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஏனைய நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles