NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துருக்கி ஜனாதிபதி தேர்தல் – 2ஆம் சுற்று தேர்தல் திகதி அறிவிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

துருக்கியில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் இடம்பெற்ற நிலையில், தற்போதைய ஜனாதிபதி எர்டோகனும், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் கெமால் கிலிக்டரோக்லுவும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

துருக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற வேண்டும்.

இதில் ஜனாதிபதி; எர்டோகன் சுமார் 49.50 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளார். எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட கெமால் கிலிக்டரோக்லு 44.79 சதவீதம் வாக்குகள் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதமையால், எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் 2ஆவது சுற்று நடைபெறும் என அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share:

Related Articles