NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு படகுகள் தீப்பற்றல்!

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி படகுகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன்இ தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏனைய மீன்பிடி படகுகளில் தீ பரவாமல் இருப்பதற்கு அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீப்பற்றி எரிந்த இரண்டு மீன்பிடி படகுகளும் குடாவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஜயந்த ஜயவெல்ல என்பவருக்குச் சொந்தமானது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles