NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்னாபிரிக்காவை வெள்ளையடிப்பு செய்த பாகிஸ்தான்!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி எதிரணியின் சொந்த மண்ணில் வெள்ளையடிப்பு செய்தது.

மேலும் T20 தொடரை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்துள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற T20 தொடரை 2-0 என தென்னாபிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் முடிவில் இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.

இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.போட்டியில் மழை பெய்த காரணத்தால் இன்னிங்ஸ் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 47 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 308 ஓட்டங்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 101 ஓட்டகங்கள் எடுத்தார்.

தொடர்ந்து 309 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்னாபிரிக்கா 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 271 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றது. இதன் மூலம் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் பொக்சிங் டே டெஸ்ட் போட்டியாக ஆரம்பமாகிறது.

Share:

Related Articles