NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்னாப்பிரிக்கவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபடியாக டேவிட் மில்லர் 101 ஓட்டங்களை பெற்றதுடன், ஹென்ரிச் கிளாசென் 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 213 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிரண்யிக்கப்பட்டிருந்த நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் இந்திய அணியுடன் அவுஸ்திரேலிய அணி பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது.

Share:

Related Articles