தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் குழு யூனின் பதவி நீக்க தீர்மானத்தை ஒருமனதாக உறுதிசெய்துள்ளனர்.
அதற்கமையஇ தென்கொரியத் ஜனாதிபதி உடன் அமுலாகும் வகையில் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்இ புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக 60 நாட்களுக்குள் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என விசாரணையின் போதுஇ அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதி இரு தரப்பினரின் வாதங்களையும் வாசித்தார். யூன் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியபோது நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
தேர்தல் நடைபெறும் காலம் வரையில் தற்போதைய பிரதமர்இ பதில் ஜனாதிபதியாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.