NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெமட்டகொடையில் பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தெமட்டகொடையில் பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான தெமட்டகொடை வேலைத்தளத்துக்குள் பிரவேசித்த மூவரை கைதுசெய்யும் வகையில் வானத்தை நோக்கி சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அவர்களில் இருவரை கைதுசெய்ததாக புகையிரத பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (15) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

54 ஏக்கர் பரப்பளவுள்ள தெமட்டகொடை புகையிரத வேலைத்தளத்தை மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி, அங்கிருந்து பல்வேறு பொருட்களை திருடி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அந்த வேலைத்தளத்துக்குள் 3 திருடர்கள் நுழைந்ததை அறிந்த புiகியரத பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடிக்க முயன்றபோது, ஒருவர் பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.

அப்போது மற்றைய பாதுகாப்புக் குழுவினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட, இரண்டு சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்து கைதுசெய்துள்ளனர்.

இதன்போது இந்த 3 திருடர்களையும் சுற்றிவளைத்து மடக்கிப் பிடிக்க சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பாதுகாப்பு அதிகாரிகள் முயன்றபோதும், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும், இந்தக் கும்பல் டீசல், புகையிரத உதிரிப்பாகங்கள் மற்றும் இரும்புக்கம்பிகளை திருடியதாகவும் புகையிரத பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles