பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவரான தெமட்டகொட சமிந்தவின் பெயரைப் பயன்படுத்தி வர்த்தகர்களிடம் கப்பம் கோரிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை – தெய்யந்தர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த இருவரும் முக்கிய வர்த்தகர்கள் பலரிடம் தெமட்டகொட சமிந்தவின் பெயரைப் பயன்படுத்தி கப்பம் கோருவதாக பொலிஸ் நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.