NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெற்கு காசாவை நோக்கி இடம்பெயரும் மக்கள்

காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்குள்ள மக்கள் தெற்கு காசாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

போர் தொடங்கிய ஒரு வாரத்தில் இஸ்ரேல் இராணுவம் விடுத்த எச்சரிகையை அடுத்து முன்னதாக மக்கள் தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அவர்கலில் பலர் சோதனை சாவடிகளை கடக்கும் போது இஸ்ரேலிய படைகளால் கைது செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் இஸ்ரேல் இராணுவம் காசாவின் வடக்குப் பகுதியை மட்டுமல்லாமல் கான் யூனிஸ் நகரம் உட்பட தெற்குப் பகுதியையும் தொடர்ந்து தாக்கிவருகிறமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles