தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினி, கமல் ,அஜித் மற்றும் விஜய் போன்ற பல பிரபலங்களுக்கு இசையமைத்து , தனக்கென தனியானதொரு இடத்தை தக்க வைத்து கொண்டவர்தான் இசையமைப்பாளர் அனிருத் .
மேலும் தமிழ் திரைப்படங்களையும் தாண்டி தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் . சமீபத்தில் இவரின் இசையில் வெளிவந்த தெலுங்கு திரைப்படங்களாக “ஜெர்சி,” “கேங் லீடர்” மற்றும் “தேவரா”போன்றவற்றை குறிப்பிடலாம்.
இந்த நிலையில் நானி தயாரிப்பில் தசரா பட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போவதாக படக்குழு தற்போது தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை விரைவில் அறியத்தருவதாகவும் மேலும் கூறியிருந்தனர் .