NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிட இலவச அனுமதி…!

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 01.10.2023 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் அக்டோபர் முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலை வளாகத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles