கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக களிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் உள்ள தென்னை செய்கையாளர்கள் ஒன்பது பத்து வருடம் கடந்த கடந்த நிலையில் பயன் பெற்று வந்த தென்னை மரங்கள் தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி நிலைமை காரணமாக முற்று முழுதாக அழிந்து எமது வாழ்வாதாரத்தை முற்றுமுழுதாக அளித்து தற்பொழுது தேங்காய்களை கடைகளில் கொள்வனவு செய்து எமது அன்றாட தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது வரலாற்றில் இல்லாதவாறு கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு தேங்காயின் விலை 100 ரூபாய் தொடக்கம் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தென்னை செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தென்னை செய்கையாளர்களை ஆகிய எம்மை தென்னை செய்கையை ஊக்குவிப்பதற்கு ஏதேனும் ஒரு வகையில் எமக்கு உதவி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட தென்னை செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர் அத்துடன் இப்பகுதியில் பல தென்னை செய்கையாளர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.