NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேங்காய் தலையில் விழுந்ததில் முன்பள்ளிச் சிறுமி பலி!

மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (01) காலை முன்பள்ளிப் பாடசாலை ஒன்றின் தோட்டத்திலிருந்த மரத்திலிருந்து தேங்காய் தலையில் வீழ்ந்து முன்பள்ளிச் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று தனது இரண்டு நண்பர்கள் மற்றும் முன்பள்ளி பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரியுடன் பாடசாலையின் நுழைவாயிலை மூடுவதற்காக சென்று மீண்டும் முன்பள்ளி பாடசாலை கட்டிடத்திற்குள் செல்ல முயன்ற போது தோட்டத்திலிருந்த தென்னை மரத்திலிருந்து தேங்காய் இச்சிறுமியின் தலையில் வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த சிறுமியை மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles