NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி!

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக மூத்த விஞ்ஞானி டி டி புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் விஜித் குணசேகரவிற்கு பதிலாக புலத்சிங்கள தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (08) காலை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின்  தலைமையகத்தில் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தலைமையில் நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Share:

Related Articles