பிரான்சில் பக்னோல்ஸ்-சர்-செஸ் பகுதியில் மத பணிகளில் ஈடுபட்டு வந்த துனிசியா நாட்டைச் சேர்ந்த நபரொருவர் சமூக வலைப்பதிவில் பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியை ‘சாத்தான்’ என பொருட்;பட பேசி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பதிவு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உளநாட்டலுவல்கள் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர் வெளியிட்டுள்ள கருத்துகள் பிரெஞ்சு குடியரசின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ளதாகவும், பெண்களுக்கு எதிராகவும், தவறான சிந்தனைகளை ஊக்குவித்து யூத மக்களுக்கு பதற்றத்தை உண்டாக்கும் வகையில் உள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.