NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் ஆரம்பம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை நேரடியாக அலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த திட்டம், அவசரகால சூழ்நிலைகளின் போது உடனடி அறிவிப்புகளை வழங்கும் என, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, மனித கடத்தல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளும் முகமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலைபேசி சேவை வழங்குநர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles