NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனை செமினி ஊக்கமருந்து சோதனையில் தோல்வி!

இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போதுஇ சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ((WADA) அதிகாரப்பூர்வமாக செமினிக்கும்இ இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்இ இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்இ குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles