தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வட்செப் ஊடாக போலித் தகவல்கள் பகிரப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு தொழில் வாய்ப்பை வழங்குதல், வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிப்புகள் விடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர். ஏ. எம். எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸ் கணினி குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டு பரப்படும் லிங்குகளுக்குள் பிரவேசிக்கவோ, அவற்றை பகிரவோ வேண்டாமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். ஏ. எம். எல் ரத்நாயக்க பொதுமக்களை கோரியுள்ளார்.