(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையின் தேர்தல் முறைமையில் திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட 09 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் மற்றுமொரு உறுப்பினரை நியமித்துள்ளது.
2023 நவம்பர் 02 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானியின்படி, ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக அலன் கார்மைக்கல் வெரே டேவிட் எஸ்குவேர் (Alan Carmichael Vere David Esquire) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் தகவல்களைப் பெறுதல் மற்றும் சமர்ப்பித்தல், விசாரணை செய்தல், தற்போதுள்ள அனைத்து தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை விசாரித்தல் மற்றும் ஆய்வு செய்தல் மற்றும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை 6 மாதங்களுக்குள் திருத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குதல் இவர்களது கடமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது.