NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1115 முறைப்பாடுகள்..!

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவுக்கு தற்போது வரை 1155 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜூலை 31ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 26 ஆம் திகதிவரை தேர்தல் சட்ட மீறல்களின் எண்ணிக்கை 1155 ஆக உள்ளதாக தெரிவிக்கப்டடுள்ளது.

அவற்றில் 495 தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையத்திலும், 605 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாடுகளும் மையத்திலும் பெறப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் ஒரேயொரு முறைப்பாடு மட்டுமே பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles