பாராளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சக ஆசிரியர்களும் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாடசாலை நேரங்களிலும் பாடசாலை முடிவடைந்த பின்னரும் ஆசிரியர்கள் தமது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றமையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நேரடியாகவே பாதிக்கப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் அதிகளவில் ஆசிரியர்களின் ஆதரவை கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில பாடசாலைகளில் அதிபர்களின் அனுமதியுடன் ஆசிரியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு வேட்பாளர்களிடம் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை நம்பி எவ்வாறு வாக்களிப்பது என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.
அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம்இ பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.