NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் பிரசாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் பிறகு, எந்தவொரு தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பொது அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்கு 6 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 48 மணித்தியாலங்களுக்குள் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles