NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் (18) நிறைவடையவுள்ள நிலையில், கொழும்பு, நுகேகொடை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரக் கூட்டம், கிராண்ட்பாஸ் – பலாமரச் சந்தியிலும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் மருதானை- டவர் மண்டபத்துக்கு முன்பாகவும் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் கூட்டம் நுகேகொடை நகரிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசாரக் கூட்டம் பிலியந்தலை பகுதியிலும் நாளை பிற்பகல் இடம்பெறவுள்ளது.

எனவே, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் இடங்களை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்வதற்கு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

Share:

Related Articles