பொருளாதார ரீதியாக நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டிலே தோல்வி அடைந்த இந்த அரசாங்கமானது, தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வெற்றி பெற்று இன்று அலங்கோலமான அரசாங்கமாக மாறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விசனம் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையில் வடகொழும்பு புளூமெண்டல் வட்டாரத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான உடையார் சிவரஞ்சனின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக வடகொழும்பு புளூமெண்டல் வீரமஹா காளியம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.


