NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடரும் வைத்தியசாலை மரணங்கள் – செலுத்தப்பட்ட ஊசியால் உயிரிழந்த யுவதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் தனது மகள் உயிரிழந்துள்ளதாக தாய் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அஜீரணக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த 21 வயதான யுவி ஒருவர் அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிகிச்சையின் போது அவருக்கு போடப்பட்ட ஊசியால் உடல்நிலை மோசமாகி உடல் நீல நிறமாக மாறியதாக அவரது தாயார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேராதனை வைத்தியசாலையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.

Share:

Related Articles