NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொடர் மாடியிலிருந்து வீழ்ந்து இளைஞன் பலி – வெள்ளவத்தையில் சம்பவம்…!

கொழும்பு வெள்ளவத்தையில் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து தவறி வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உருத்ரா மாவத்தையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 20 வயதான இளைஞன் தவறி வீழ்ந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது பெற்றோருடன் தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்மாடி குடியிருப்பின் பின் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles