ஈக்வடரில் தொலைக்காட்சி நிலையமொன்றை நேரடி ஒளிபரப்பின் போது ஆயுதமேந்திய குழு தாக்கி, ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர்களையும், அதில் கலந்து கொண்டவர்களையும் ஆயுதமேந்திய குழுவினர் மிரட்டுவதும், துப்பாக்கியை காட்டி மிரட்டி பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொள்வதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி மீதான தாக்குதலில் நேரடி ஒளிபரப்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு சுமார் 15 நிமிடங்கள் ஆயுதமேந்திய குழுவின் அச்சுறுத்தல் செயற்பாடானது ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
Que pena todo lo que esta pasando con los hermanos del canal tc televisión, Dios los cuide pic.twitter.com/behRNVacSz
— Emergencias Ec (@EmergenciasEc) January 9, 2024