(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
திருகோணமலை – கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் சரிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலத்த காற்றினால் குறித்த கோபுரம் இன்று (04) முற்பகல் சரிந்து விழுந்துள்ளது.
அருகில் இருந்த தபால் கட்டடத்தின் மேல் சரிந்து விழுந்ததால் கடமையில் ஈடுபட்டிருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள், கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.