NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொழில்வாய்ப்பு எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜை கைது!

சட்டவிரோதமான முறையில் மியன்மார், லாவோஸூக்கு நபர்களை அழைத்துச் சென்று, மனித வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 54 வயதான சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லை, பிரதேசத்தில் வர்த்தக விசாரணை மற்றும் சமுர்த்தி குற்ற விசாரணை பிரிவுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நேற்று (10) குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் கணினி தகவல்கள் தரவேற்றல் மற்றும் நுகர்வோர் சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பிரஜைகள் சிலரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுக்கொண்டு இந்த மனித வர்த்தகத்தை அவர் முன்னெடுத்திருந்தார் என்பது விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது. 

Share:

Related Articles