NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நகர மண்டபம் வரையான வீதியில் போக்குவரத்து தடை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வைத்தியர்களின் போராட்டம் காரணமாக சுகாதார அமைச்சிலிருந்து நகர மண்டபம் வரையான வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான வைத்தியர்கள் ஈடுபட்டதுடன், பலத்த பாதுகாப்பும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles