NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நகைக்கடையில் நுழைந்த திருட்டு கும்பல் – மடக்கிப்பிடித்த பிரதேசவாசிகள்!

கல்முனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனையில் பிரபலமான நகைக்கடையொன்றில்  நுழைந்த திருட்டு கும்பலை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (15) மருதமுனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கறுப்பு நிறக் காரில் வந்த 3 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்கிய கும்பலேயே மக்கள் மடக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தனிமையில் இருந்த வயதான நகைக்கடை உரிமையாளரிடம் நகையைப் பெற்றுக்கொண்டு ஓட முற்பட்டவேளை மருதமுனை மக்களால் மடக்கிப்பிடித்து கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட கார் என்பன மருதமுனை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles