NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடுவர் வழங்கிய தீர்ப்பு தவறானது – ஆதாரத்தை வெளியிட்ட மேத்யூஸ்!

தான் இரண்டு நிமிடங்களுக்கு முன்பாகவே மைதானத்திற்குள் சென்று, துடுப்பெடுத்தாட தயாரானமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

தலைகவசத்தை அணிந்து, துடுப்பெடுத்தாட தயாராகி ஐந்து விநாடிகள் எஞ்சியிருந்ததை காணொளி மூலம் உறுதிப்படுத்த முடியும் எனவும் கூறிய அவர் இதன்படி, நான்காவது நடுவர் வழங்கிய தீர்ப்பு தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி துடுப்பெடுத்தாடுவதற்கு ஐந்து விநாடிகள் எஞ்சியிருந்ததை உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Share:

Related Articles