(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் உள்ள அஞ்சல் பணியாளர்களுக்கு தபால்; சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக விசேட சலுகை ஒன்று வழங்க நடவக்கை எடுக்கப்படவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் காலங்களில் துவிச்சக்கரவண்டி அல்லாமல் முச்சக்கர வண்டிகளில் தபால் விநியோகம் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதற்காக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த துவிச்சக்கரவண்டிகளுக்கு பதிலாக 1000 முச்சக்கரவண்டிகள் நாடு முழுவதும் பயன்படுத்தவும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
10 பில்லியன் செலவில் பொது-தனியார் கூட்டுப் பங்காளியாக இந்த நவீனமயமாக்கல் செயல்முறை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் தபால் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள நட்டம் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் 4,000 மில்லியன் ரூபாவால் குறைக்கப்படும். எனினும் தபால் திணைக்களம் எவ்வகையிலும் தனியார்மயமாக்கப்பட மாட்டாது எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.