பிரதமரின் அறிவுறுத்தலின்படி, பண்டிகை அலங்காரங்கள் இன்றி திறப்பு விழாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையானது விளையாட்டு வீரர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதே இதன் நோக்கம் என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகளினால் ஹொக்கி மைதானம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.மகேசன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதுடன் இலங்கை ஹொக்கி சங்கத்தின் தலைவர் P விஸ்வநாதனும் சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்த ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் போடப்பட்டிருந்த கார்பெட் ஆனது சரியான பராமரிப்பின்றி அழிவடைந்திருந்ததால் சுமார் இரண்டு வருடங்களாக முக்கிய லீக் போட்டிகளை நடத்த முடியாமல் போனவை குறிப்பிடத்தக்கது.
பெருமளவு பணத்தை செலவழித்தே இம்மை தானம் மீள புணரமைக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரியர் அட்மிரல் ஷமல் பெர்னாண்டோ இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இன்றைய இந்நிகழ்வில் கொழும்பைச் சேர்ந்த பிரபல பாடசாலைகளான நாவல ஜனாதிபதி பெண்கள் பாடசாலை, பிஷப் கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, ரோயல் கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவைகள் கலந்து கொண்டு கண்காட்சிப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.