நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை விஞ்ஞானி கலாநிதி பியுமி விஜேசேகர இடம்பெற்றுள்ளார்.
செவ்வாய் கிரகம் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆய்வுப் பணிகளுக்காக நான்கு பேர் கொண்ட குழுவில் இவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் கிரக பயணத்திற்காக நாசாவால் நான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணிக்காக, பியுமி விஜேசேகர உள்ளிட்ட குழுவினர் மே 10 ஆம் திகதி “மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக்” பணி பகுதிக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 45 நாட்கள் அவர்கள் அங்கு தங்கியிருப்பார்கள் எனவும், ஜூன் 24 ஆம் திகதி குழுவினர் பூமிக்கு திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சென்றதும், குழுவினர் சுமார் 45 நாட்கள் செவ்வாய் கிரக சூழலில் தமது பொழுதை செலவிடுவார்கள்.