NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வைத்தியர்கள் பற்றாக்குறை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் வெற்றிடங்கள் தொடர்பில் சித்ரால் பெர்ணான்டோ MP கேட்ட கேள்விக்கு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்தார்.

அந்தவகையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் விசேட வைத்தியர்களுக்கு 7 வெற்றிடங்களும், பதிவுசெய்யப்பட்ட வைத்தியர்களில் ஒரு வெற்றிடமும், வைத்திய அதிகாரிகளில் 13 வெற்றிடங்களும், பல் வைத்திய நிபுணர்களில் 3 வெற்றிடங்களும், தாதியர்களில், 9 வெற்றிடங்களும் நிலவுவதாகவும், மாரவில வைத்தியசாலை மற்றும் சிலாபம் ஆகிய ஆதார வைத்தியசாலைகளிலும் இதுபோன்ற வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டினார்.

தற்பொழுது இடம்பெற்றுவரும் வாய்மூல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது குறிக்கிட்ட சித்ரால் எம்.பி, சிலாபத்தில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு தற்பொழுது வரை இருப்பதற்கு போதிய இடம் இல்லாதிருக்கின்றமை தொடர்பில் எடுத்துக்கூறினார். 10 வருடங்களுக்கும் மேலாக இதே நிலைமை நீடித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த 69 பில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வரவு – செலவு திட்டத்தை முடிக்க நிதி எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles