நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் பஸ்களை சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும்இ நீண்ட தூரச் சேவை பேருந்துகளில் அவர்கள் பயணிப்பதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதன்போது கவனக்குறைவாக வாகனம் செலுத்துதல்இ கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்திக் கொண்டு வாகனம் செலுத்துதல்இ பாதசாரி கடவைகளில் வாகனங்களை முந்திச் செல்வது மற்றும் அதிவேகமாகச் செல்வது போன்ற போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படவுள்ளன.
சீருடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பஸ்ஸை நிறுத்திச் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து சாரதிகளுக்கு தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ்தெரிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.