NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் ஒற்றுமையை சீர் குலைக்க முயற்சி – ராகுல் , மோடி குற்றச்சாட்டு!

வெறுப்புணர்வும் எதிர்மறை எண்ணமும் நிறைந்த சில தனிநபர்கள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் இந்தியாவை அவமதிக்க எந்த வாய்ப்பையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்..

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக குறிப்பிட்டு, பிரதமர இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இந்தியாவில் பாகுபாடற்ற நிலை உருவாகும்போது இடஒதுக்கீட்டை இரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும். தற்போது அந்த நிலை இல்லை என அமெரிக்காவில் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் அண்மையில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது உள்ளிட்ட ராகுல் தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது.

இந்தச் சூழலில், குஜராத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பெயரை நேரடியாக கூறாமல் அவரை கடுமையாக விமர்சித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles