NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் கல்வி முறைமையினூடாக அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதே பிரதான நோக்கமாகும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய..!

அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைய, உள்நாட்டு மற்றும் உலகளாவிய தொழிலாளர் சந்தையை பூர்த்தி செய்யும் வகையில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டுக்கு தேவைப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் பயிற்சி பெற்ற டிப்ளோமாதாரிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திறன்களைக் கொண்டவர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாட்டின் கல்வி முறைமையினூடாக அரசாங்கத்தின் இலக்குகளை அடைவதே பிரதான நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles