NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு?

நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ சமையல் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகப் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம், தற்போது இந்த நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக சில இடங்களுக்கு லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

நேற்று முதல் இந்த நிலைமை சீர் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles