NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் சில பிரதேசங்களுக்கு அனர்த்த நிவாரண குழுக்கள் நியமனம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென் மாகாணத்தின் பல பகுதிகளில் அனர்த்த நிவாரண குழுக்களை நிலைநிறுத்துவதற்கு இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, வெள்ளம் மற்றும் பேரழிவில் இருந்து பாதிக்க மக்களை மீட்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் ஆலோசனையின் பேரில் அக்குரஸ்ஸ, கொட்டாபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பகுதிகளுக்கு நிவாரணக் குழுக்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை பெருக்கெடுத்துள்ளதால் வெள்ள நிலைமை காரணமாக அந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடற்படை நிவாரண குழுக்கள் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க தயாராக உள்ளன.

Share:

Related Articles