NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் தென் பகுதிக்கு வெள்ள அபாய எச்சிரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அடுத்த 3 முதல் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல பகுதிகளுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

நில்வலா ஆற்றுப்படுக்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பிரதேசங்களில் கணிசமான அளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

குறித்த பகுதிகளில் மழை பெய்து வருவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொட்டாபொல, பிடபெத்தர, பஸ்கொட, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் நில்வலா கங்கை கசிவுப் பாதைக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் இந்த எச்சரிக்கை அறிவிப்பு அமுலில் இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles