நாட்டின் பொருளாதாரம் மீண்டு தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால்,இன்னும் கடினமான காலம் வரவிருக்கிறது என்றும், பொருளாதாரம் ஒரே திசையில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எதிர்வரும் 4 வருடங்களுக்குப் பொருளாதாரம் ஒரே திசையில் செல்ல வேண்டும் என்றும், 2 படிகள் முன்னோக்கி ஒரு அடி பின்வாங்கினால், தற்போதைய பொருளாதார நிலைக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சவால்களும் சிரமங்களும் வரலாம். இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை ஒரே மதிப்பிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர் அடுத்த 10 வருடங்களில் அரசாங்கத்தின் கடனை ஸ்திரப்படுத்துவது சவால்களில் ஒன்றாகும். சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் உள்ள சீர்திருத்தங்கள் 4 வருடங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.