NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் சுமார் 61,183 பேர் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், இம்மாதம் 87,521 சர்வதேச பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டிருந்த நிலையில், இலங்கை தனது இலக்கில் 70 சதவீதத்தை அடைந்துள்ளது.

அந்தவகையில் இம்மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் தினசரி வருகை சராசரியாக 3,059ஆக பதிவாகியுள்ளது.

முதல் வாரத்தில், 19,365 சுற்றுலாப் பயணிகளும், 2ஆவது வாரத்தில் 20,541 சுற்றுலாப் பயணிகளும், 3ஆவது வாரத்தில் 20,986 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

Share:

Related Articles