NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டிலுள்ள வணிக வங்கிகள் எடுத்துள்ள தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை குறைப்பது தொடர்பான தீர்மானமொன்றை வணிக வங்கிகள் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த வட்டி வீதத்தை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.

அதன்படி கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 30 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.

தற்போது குறித்த வட்டி வீதமானது 34 சதவீதம் வரை காணப்படுவதாக தெரியவருகிறது.

Share:

Related Articles