நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை நாம் எல்லாரும் இலங்கையர் மட்டும்தான். நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றியடைய வைத்துள்ளனர் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் …..
தமிழரது பகுதிகளில் எனக்கு தமிழில் கதைப்பதற்கு விருப்பம். திருமலையில் கடந்த 35 வருடங்களுக்கு முன் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தோம். தற்போது மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அதிகமான நேரங்களில் தமிழில்தான் கடமை களை முன்னெடுத்து வருகின்றேன்.
நேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், இனிமேல் நாம் எல்லாரும் இலங்கையர் மட்டும்தான், நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர்கள், முஸ்லிம்கள், எல்லாரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றி அடைய வைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
இனி நமக்கு எல்லாருக்கும் ஒரே நாடு இலங்கை என்ற அடையாளம்தான். எனவே கிழக்கு மாகாணத்தை கட்டி எழுப்ப அனைவரது ஒத்துழைப் பையும் நான் வேண்டி நிற்கின்றேன். தமது மாகாணத்தில் சகல மக்களும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற ஆதரவினை வேண்டி நிற்கிறேன். என அவர் குறிப்பிட்டுள்ளார்.