NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை – அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவிப்பு..!

இம்மாதம் தமது எரிபொருள் விலையிலும் திருத்தம் மேற்க்கொள்ளப்படமாட்டாது என சினொபெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இம் மாதம் எரிபொருள் விலை திருத்தப்பட மாட்டாது என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய விலையிலேயே மார்ச் மாதமும் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 92 ரக பெட்ரோல் தற்போதைய விலையான 309 ரூபாவுக்கும், 95 ரக பெட்ரோல் 371 ரூபாவுக்கும், வெள்ளை டீசல் 286 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் 331 ரூபாவுக்கும், மண்ணெண்ணெய் 183 ரூபாவுக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்றவர்கள் குறித்து கூறுகையில், தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles