NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகளில் வீழ்ச்சி – திருமண வயதுடையவர்கள் வெளிநாடு செல்வதே காரணம்

இலங்கையில் கடந்த 5 வருடங்களில் குழந்தை பிறப்புகள் 100,000க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

மகப்பேற்று விசேட வைத்தியர்களினால் கடந்த 5 வருடங்களின் தகவல்களை கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2017 ஆம் ஆண்டு நாட்டில் 325,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் ஆனால், 2023 ஆம் ஆண்டு 247,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, 2017 ஆம் ஆண்டு வருடந்த மரணம் 146,000 ஆக பதிவாகியுள்ளதுடன், 2023 ஆம் ஆண்டு 181,000 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கருத்தரிக்கும் திருமண வயதுடைய இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையினாலேயே குழந்தை பிறப்புகள் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடியினால் குடும்பம் ஒன்றில் கருத்தரிப்பை மட்டுப்படுத்தல் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்திவைப்பதும் குழந்தை பிறப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியினால் கடந்த 5 வருடங்களில் திருமணம் செய்துகொள்வது 12.5 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வேலை செய்வோர் குறைவடைவதுடன், முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மகப்பேற்று விசேட வைத்தியர் சனத் லெனரோல் மேலும் தெரிவித்துள்ளார்.

                                                                                                                                -   தர்மராஜ் யோகராஜ் 
Share:

Related Articles