கடந்த வருடம் நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி குறித்த நேயாளர்களில் 5,291 ஆண்கள் 3,259 பெண்கள் மற்றும் 250 குழந்தை இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதிகமாக கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்;டுள்ளது.
2035 ஆம் ஆண்டுக்குள் காசநோயாளிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தாலும் காசநோயினால் ஏற்படும் இறப்புக்களை 95 சதவீதத்தாலும் குறைப்பதே எமது நோக்கமென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் இருமல் லேசான காய்ச்சல்இ உடல் எடை இழப்பு இபசியின்மை இ இரவில் வியர்த்தல் இ சோர்வு மற்றும் உடல்நலக் குறைவு ஆகியவை காசநோயின் அறிகுறிகள் ஆகும்
இந்த நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்கள் உடனடியாக வைத்திய உதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.