NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் சிறுமிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பம் மூலம் தகாத புகைப்படங்களாக மாற்றும் செயற்பாடுகள் அதிகரிப்பு..!

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பொருத்தமற்ற செயலை 13 தொடக்கம் 17 வயதுடைய சிறுவர்கள் செய்வதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை செய்த சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் ஒரே வயதுடைய நண்பர்களாகும்.

தங்கள் வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்களைத் திருத்தி ஒன்லைனில் பதிவேற்ற யுஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என வினவிய போது, AI தொழில்நுட்பத்தை பரிசோதிக்க அதை விளையாட்டதாக செய்ததாகக் கூறுவதாகவும் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.

இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles